குஜராத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 500 டன்னுக்கும் மேற்பட்ட துவரம் பருப்பு மூட்டைகள் எடப்பாடி கிடங்கில் இறக்கி வைக்கப்படாமல் லாரிகளிலேயே வைக்கப்பட்டுள்ளதால், 12 நாட்களுக்கும் மேலாக லாரி ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நுகர்பொருள் கிடங்கிற்கு குஜராத்திலிருந்து லாரிகள் மூலம் 500 டன்னுக்கும் அதிகமான துவரம் பருப்பு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.
சரியான திட்டமிடல் இல்லாததால், இந்த மூட்டைகள் லாரிகளிலேயே தேங்கிக் கிடக்கின்றன.
கிடங்கில் அரிசி மூட்டைகள் நிரம்பிக் கிடப்பதால் துவரம் பருப்பு மூட்டைகளை இறக்கி வைக்க இடமில்லை என்றும், அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பிய பிறகே துவரம் பருப்பை இறக்கி வைக்க முடியும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன் இங்கு வந்த லாரி ஓட்டுநர்கள், இன்னும் வீடு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கித் தவிக்கின்றனர்.
















