ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 70 வயது மூதாட்டியை காட்டு பன்றி முட்டித் தூக்கி வீசிய காட்சி வெளியாகி உள்ளது.
பவானி சாகர் வனச்சரகத்தை ஒட்டிய தேநீர் கடையில், மூதாட்டி ஒருவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த காட்டு பன்றி, மூதாட்டியை முட்டித் தூக்கி வீசியது.
இதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றி, பயிர்களைச் சேதப்படுத்துவதாகவும் அவை ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















