குஜராத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் 3 வயது சிறுமி தனியாக விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கார், சிறுமிமீது மோதி, சிறிது தூரம் சென்று நின்றது. இதில், காருக்கு அடியில் சிக்கிய சிறுமி காயமின்றி உயிர் தப்பி வெளியே வந்தார்.
இதனிடையே, காரிலிருந்து இறங்கிய சிறுவனை, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கடுமையாகத் தாக்கினார். இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
















