கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.
ஓடந்துறை காப்புக்காட்டு வனப்பகுதியையொட்டி திருமலைராஜ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை சார்பில் அகழியும் தோண்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அகழியை கடந்து வந்த ஆண் யானை, மின்வேலியில் சிக்கி அகழிக்குள் விழுந்து உயிரிழந்தது.
















