சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளதை ஒட்டி, இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், சர்தார் வல்லபாய் படேல் இறந்த பிறகு, காங்கிரஸ் கட்சி அவரை மறக்க அனைத்து முயற்சிகளையும் செய்ததாகவும், அவரை போன்ற ஒரு சிறந்த ஆளுமைக்குப் பாரத ரத்னா விருது வழங்குவதில் 41 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி மட்டுமே காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.
நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வரானபோது, அவர் ஒற்றுமை சிலையை நிறுவி, சர்தார் வல்லபாய் படேல் நினைவுச் சின்னத்தைக் கட்டியதாகவும், இது உலகளவில் பிரபலமான ஒரு அற்புதமான நினைவுச் சின்னம் எனவும் கூறினார்.
இந்த ஆண்டு முதல், ஒவ்வொரு அக்டோபர் 31ஆம் தேதி பிரமாண்ட அணிவகுப்பு நடத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.
















