இந்தியாவின் 10 நிமிட டெலிவரி முறைகுறித்து ஜெர்மானியர்கள் ஆச்சர்யமடைவதாகக் கூறப்பட்ட லிங்க்டு இன் பதிவு வைரலாகி வருகிறது.
இந்தியாவில் செப்டோ, இன்ஸ்டா மார்ட், பிளிங்க் இட் போன்ற தளங்கள் 10 நிமிடங்களுக்குள்ளாக, ஆர்டர் செய்யும் பொருட்களை டெலிவரி செய்து வருகின்றன.
இதனைப் பிராங்பேர்ட்டைச் சேர்ந்த ஒரு இந்தியர், ஜெர்மனியின் மெதுவான முறையுடன் ஒப்பிட்டு லிங்க்டு இன் தளத்தில் பதிவிட்டார்.
அதில், ஜெர்மனியில் ஆர்டர் செய்த பொருட்கள் 5 நாட்கள் கழித்தே டெலிவரி செய்யப்படுவதாகவும், இந்தியாவில் 10 நிமிடங்களில் ஐபோன் கூட டெலிவரி செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது பலரையும் டெலிபோர்டேஷனை போல உணர வைப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
















