ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
கலர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்ற விவசாயி, தனது விவசாய நிலத்தைப் பார்வையிடுவதற்காகச் சென்றார்.
அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















