இங்கிலாந்தின் லண்டனில் உள்ள சுவாமி நாராயண் கோயிலில், மன்னர் சார்லஸ், ராணி கமிலா ஆகியோர் வழிபாடு நடத்தினர்.
லண்டனின் சுவாமி நாராயண் கோயிலின் 30-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்குக் கோயில் நிர்வாகத்தினர் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
பகவான் சுவாமி நாராயணர் சிலைக்கு மலர்தூவி அவர்கள் வழிபட்டனர். தொடர்ந்து கோயிலின் சிற்பக்கலை மற்றும் வளாகத்தை அவர்கள் சுற்றிப் பார்த்தனர்.
















