சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் அங்குள்ள குழந்தைகள் பிரிவில், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், இதனால் உணவுகளை வெளியே வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையென அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
















