பெங்களூரில் உணவு விநியோகம் செய்யும் ஊழியரை கார் ஏற்றிக் கொலை செய்த தம்பதியைப் போலீசார் கைது செய்தனர்.
சாலையில் உணவு டெலிவரி ஊழியரை கார் ஏற்றிக் கொல்லும் காட்சியும், பிறகு அதே வழியில் நிதானமாக வந்து காரின் உடைந்த பாகங்களை எடுத்துச் செல்லும் விடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த மனோஜ் குமார், அவரது மனைவியான ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த ஆரத்தி ஷர்மா ஆகியோர் உணவு டெலிவிரி ஊழியர் தர்ஷனைக் கொலை செய்தக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் சாலையில் நடந்த சிறு வாக்குவாதம் காரணமாக இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்துள்ளது.
















