உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் சில நாய்கள் நீல நிறத்தில் மாறியுள்ளன.
இந்த நாய்கள் 1986ல் நடந்த செர்னோபில் அணுசக்தி பேரழிவிற்கு பிறகு அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களின் சந்ததியைச் சேர்ந்தவை ஆகும்.
இந்த நாய்கள் மனித நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதியில் வன விலங்குகளுடன் வாழ்கின்றன.
டாக்ஸ் ஆஃப் செர்னோபில் அமைப்பு இங்குள்ள சுமார் 700 நாய்களுக்கு உணவு மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யச் சென்றபோது போது மூன்று நாய்கள் விசித்திரமாக நீல நிறத்தில் இருப்பதை குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
அவை இதற்கு முன் சாதாரணமாகவே இருந்ததாகவும், அப்பகுதியில் உள்ள எதோ ஒரு ரசாயனத்தால் நிறம் மாறியிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் உண்மையான காரணத்தைக் கண்டறிய அவற்றின் முடி மற்றும் இரத்த மாதிரிகளைச் சேகரித்து மருத்துவ குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
















