சென்னை ஈஞ்சம்பாக்கம், திருவள்ளூர் சாலை குண்டும் குழியுமாகக் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈஞ்சம்பாக்கம் திருவள்ளூர் சாலையில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குச் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு மின்சார கேபிள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் பணிகள் முடிந்த பின்பும் சாலை சரிவர மறுசீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் சாலை பள்ளங்களில் தேங்கிய மழைநீரால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















