சென்னையில், காற்றாலை சக்தி சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாட்டை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தொடங்கி வைத்தார்.
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் எரிசக்தி அமைச்சகம் மற்றும் காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஏழாவது காற்றாலை சக்தி சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெற்று வருகிறது. மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பங்கேற்று இந்தக் கண்காட்சி மற்றும் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
நாளை வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி மற்றும் மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 350-க்கும் அதிகமான நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.
டென்மார்க் மற்றும் ஸ்பெயின் போன்ற பல நாடுகளின் சர்வதேச கண்காட்சி அரங்குகளும் இந்த நிகழ்வில் இடம்பெற்றுள்ளன. இந்த மாநாட்டை Suzlon Energy Limited, Envision Energy போன்ற பல நிறுவனங்கள் ஒருங்கிணைந்து நடத்துகிறது.
இதில், மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜொஹன் சாத்தா ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
















