மும்பையில் நடந்த என்ரிக் இக்லிசியஸ் பாப் இசைக் கச்சேரியில் மேடை நோக்கி எறியப்பட்ட செல்போனில் என்ரிக்கே இக்லேசியஸ் செல்ஃபி எடுத்து மீண்டும் ரசிகரை நோக்கி வீசினார்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த பாப் பாடகர் என்ரிக்கே இக்லேசியஸ், மும்பையில் நடந்த இசை கச்சேரி மூலம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். கச்சேரி நடந்து கொண்டிருந்தபோது, ரசிகர் ஒருவர் தனது கைப்பேசியை மேடையை நோக்கி எறிந்தார்.
அப்போது, மைக்கைப் பிடித்திருந்தபடியே, 50 வயதான என்ரிக்கே, அந்தக் கைப்பேசியை சாமர்த்தியமாகப் பிடித்து, புன்னகையுடன் செல்ஃபி எடுத்து, பின்னர் அதை மீண்டும் ரசிகர்களை நோக்கி வீசி எறிந்தார்.
















