இங்கிலாந்து மிருகக்காட்சிசாலையில் ஹாலோவின் திருவிழாவை ஒட்டி உணவாக வழங்கப்பட்ட பூசணிக்காய்களை சிங்கம் உள்ளிட்ட விலங்குகள் உண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்த சம்ஹைன் மதத்தைப் பின்பற்றும் மக்கள் கொண்டாடிய செல்டிக் என்ற அறுவடை திருவிழாவிலிருந்து இந்த ஹாலோவீன் திருவிழா வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நாளானது கோடை காலத்தின் முடிவாகவும், குளிர்காலத்தின் தொடக்கமாகவும் அன்றைய மக்கள் கருதினர்.
குறிப்பாக ஒளி குறைந்து இருள் பரவத் தொடங்கும் காலம் என்பதால் இறந்தவர்கள் பேய்களாக அவர்களுடைய இடத்திற்கு வருவதாகவும், அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களைச் சேதப்படுத்துவதாகவும் நம்பினர்.
இவ்வாறு பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு 20-ம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமான பண்டிகையாக ஹாலோவீன் மாறியது.
அதிலிருந்து ஆண்டுதோறும் அக்டோபர் 31-ம் தேதி ஹாலோவீன் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டது.
அந்த வகையில், ஹாலோவீன் திருவிழாவுக்காக இங்கிலாந்தில் பேய்கள் போன்று உருவாக்கப்பட்ட பூசணிக்காய்களை மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கங்கள், சிறுத்தைகள் உள்ளிட்டவற்றுக்கு உணவாக வழங்கப்பட்டன. அதனை விலங்குகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு உண்டன.
















