பலுசிஸ்தான் மாகாணத்தில் 18 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டாவில் சில்டன் மலைத்தொடரிலும், புலேடாவிலும் பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.
இதில் சில்டானில் 14 பயங்கரவாதிகளும், கெச்சில் 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
















