ஊதிய பிரச்சினை காரணமாகப் பாதுகாப்புப் படையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதை அடுத்து, இங்கிலாந்து வங்கியின் சுமார் 4 லட்சம் தங்கக்கட்டிகள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யூனியன் யுனைட் தொழிற்சங்கத்தை சார்ந்த சுமார் 40 பாதுகாப்புக் காவலர்கள் வரும் 13-ம் தேதி காலை 7 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றனர்.
இதன் காரணமாக இங்கிலாந்து வங்கியில் சுமார் 4 லட்சம் தங்கக்கட்டிகள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
எனவே அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வங்கி பாதுகாப்பு படையினருக்கு ஊதிய உயர்வு அறிவிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















