உத்தரப்பிரதேசத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பரதபூர் கிராமத்திற்கு அருகில் உள்ள கவுடியாலா ஆற்றில் 22 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் கிராம மக்கள் உதவியுடன் மீட்பு பணியை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 60 வயது பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேலும் ஐந்து குழந்தைகள் உட்பட எட்டு பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
















