சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கத் தனியார் நிறுவனத்திற்கு 180 கோடியே 27 லட்சம் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தினந்தோறும் காலை 166 இடங்களிலும், மதியம் 285 இடங்களிலும், இரவு 61 இடங்களிலும் உணவு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு 4 ஒப்பந்தங்கள் பெறப்பட்ட நிலையில் ஒரு நிறுவனம் ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது. அதற்கான அனுமதி அளிப்பதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சி சார்பில் நிறைவேற்றப்பட்டது.
 
			 
                    















