கன்னியாகுமரியில் கோயில் சிலையைச் சேதப்படுத்தி எடுத்துச் சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 118 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உண்ணாமலை கடை பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் கடந்த 11ஆம் தேதி தாசில்தார் பயாலாபாய் தலைமையிலான அதிகாரிகள் பூட்டை உடைத்து அம்மன் சிலையைச் சேதப்படுத்தி எடுத்துச் சென்றனர்.
இச்சம்பவத்தை கண்டித்து பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்த முயன்றனர்.
அப்போதுஅவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்த போலீசார் இரவில் விடுவித்தனர்.
இந்நிலையில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் என 118 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
 
			 
                    















