சென்னை தாம்பரம் அருகே அடையாறு ஆற்றில் தூர்வாராததால் வெள்ளநீர் ஊருக்குள் புகுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஆதனூர் வழியாகப் பாயும் அடையாறு ஆற்றில் 18 கிலோ மீட்டர் தூரம் வரை தூர்வார நிதி ஒதுக்கப்பட்டும், வெறும் ஆகாய தாமரைகள் மட்டுமே அகற்றப்பட்டதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதனால் மழைக் காலங்களில் வெள்ளநீர் ஊருக்குள் புகுவதாகவும், ஆற்றில் உடனடியாகத் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசுக்குப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 
			 
                    















