108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் பொன்னப்பர் – பூமிதேவி தாயார் திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தமிழக திருப்பதி என்றழைக்கப்படும் இக்கோயில், நான்கு ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமாகும்.
இந்நிலையில், மகாவிஷ்ணு ஒப்பிலியப்பனாக அவதரித்து, பூமிதேவி தாயாரை மணமுடித்த இந்நாளில், வேத மந்திரங்கள் முழங்கத் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருமண நிகழ்வுக்கு முன்னதாகப் பக்தர்கள் மேள தாளங்கள் முழங்கப் பெருமாளுக்கும், தாயாருக்கும் சீர்வரிசை எடுத்து வந்தனர்.
பின்னர் பெருமாளும் பூமிதேவி தாயாரும் பொன் அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
இந்த விஷேச நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மணமக்களிடம் ஆசி பெற்றனர்.
 
			 
                    















