மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் உரத்தட்டுப்பாடை கண்டித்து விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வைத்தீஸ்வரன்கோவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் ஐந்தாயிரம் ஏக்கரில் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த ஒரு வாரமாக யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், உரங்கள் வந்தும் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை என கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளரிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து யூரியா தட்டுப்பாட்டை நீக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
			 
                    















