திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பந்தக்கால் நடும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் டிசம்பர் 19-ம் தேதி முதல் ஜனவரி 9ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.
அப்போது வேத மந்திரங்கள் முழங்கப் புனித நீர் ஊற்றி முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபம் அருகே திருகொட்டகை அமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
 
			 
                    















