ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அறுவடைக்கு தயாராக உள்ள நெற் பயிர்களில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் முருங்கை கிராமத்தில் உள்ள ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
இதனால் ஏரியிலிருந்து கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள நெற் பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே தற்காலிகமாக ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதை நிறுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
			 
                    















