மணிப்பூரில் தூக்கி எறியப்பட்ட பொருட்களைக் கொண்டு குப்பை தொட்டிகளை உருவாக்கிய இளைஞர்களின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
மணிப்பூரில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று, தூக்கி எறியப்பட்ட இரும்பு டப்பாக்களை சேகரித்து தூய்மைப்படுத்தியது.
பின்னர் அதற்கு நீல நிறத்தில் வண்ணம் தீட்டி, குப்பை தொட்டிகளாக மாற்றி ஒவ்வொரு வீட்டின் வாசலின் முன்னரும் மாட்டினர். கிராமத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என இளைஞர்கள் மேற்கொண்ட செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.
 
			 
                    















