பிரதம மந்திரி வித்யா லட்சுமி இணையதளம் வாயிலாகக் கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் முன்னணியில் இருப்பது புள்ளி விவரங்கள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
உயர் கல்வியை தொடர நினைக்கும் மாணவ – மாணவிகளுக்கு, கல்வி கடனுக்கான விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கும் நோக்கில் பிரதம மந்திரி வித்யா லட்சுமி இணையதளம் கொண்டு வரப்பட்டது.
இந்த இணையதளமானது, நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் வழங்கும் கல்விக்கடன் திட்டங்கள்பற்றிய விவரங்களை மாணவர்கள் எளிதில் தெரிந்துகொள்ள உதவி செய்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இணையதளம் வாயிலாகக் கடந்த 10 ஆண்டுகளில், 2 லட்சத்து 10 ஆயிரத்து 893 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாகத் தமிழகத்தில் இருந்து 71 ஆயிரத்து 365 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதும், அதில், 29 ஆயிரத்து 676 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதும் புள்ளி விவரங்கள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
அந்த வகையில், பிரதம மந்திரி வித்யா லட்சுமி இணையதளம் வாயிலாகக் கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
			 
                    















