கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
இரும்பொறை ஊராட்சியில் உள்ள பெரிய தோட்டம் பகுதியில் கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார். பெரும்பாலும் இந்துக்கள் வாழும் அப்பகுதியில் கல்லறை தோட்டம் அமைக்க அப்பகுதி மக்கள் மற்றும் இந்து முண்ணனி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் வருகைதந்த 50க்கும் மேற்பட்டோர், கல்லறை தோட்டம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட கோரி மனு அளித்தனர்.
 
			 
                    















