வியட்நாமில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை ஊர்மக்கள் மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
வியட்நாமில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக மத்தியப் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஹோய் அன் நகரம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கிய ஒரு சிறுவன், கரையில் உள்ள பொருள் ஒன்றை பிடித்தவாறு தவித்தான். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், சிறுவனுக்குக் கை கொடுத்துத் தூக்கி விட்டனர்.
 
			 
                    















