புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா முதல்வர் ஸ்டாலின்? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Oct 31, 2025, 11:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Oct 31, 2025, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இரட்டை வேடமும் போலித்தன அரசியலும் எதற்கு முதல்வர் ஸ்டாலின்
அவர்களே? இன்று தமிழர்கள்-பிகாரிகள் ஒற்றுமைக்காக காலையிலேயே கொதித்தெழுந்து பதிவிட்டுள்ள முதல்வரே.

தங்களது தேர்தல் பிரச்சாரத்தின் போது, வயிற்றுப் பிழைப்புக்காக வரும் வடமாநிலத்தவர்களைத் தமிழகத்திற்குள் திமுக என்றும் அனுமதிக்காது என்று சூளுரைத்தீர்களே, அப்போதெல்லாம் தேச ஒற்றுமை மறந்துவிட்டதா? பிகாரிகள் தமிழகத்தில் கழிவறை கழுவுகின்றனர் என்று தரக்குறைவாக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கூறியபோதும், பானி பூரி விற்பவர்கள் என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி ஏளனமாகப் பேசிய போதும், தங்களது மூத்த அமைச்சர் ஏ.வ. வேலு வடமாநிலப் பெண்களைப் பன்றிகளுடன் ஒப்பிட்டு வசைபாடிய போதும், வேற்றுமையில் ஒற்றுமை தங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? இப்படித் தாங்களும் தங்கள் திமுக உடன்பிறப்புகளும் அனுதினமும் பிகார் மக்களைப் பொதுவெளியில் வசைபாடி அவமதிக்கும் உண்மையைத் தான் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.

அதனைக் கண்டு குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததும், தேச ஒற்றுமை குறித்து பதிவிட்டு புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா? தேச ஒற்றுமையைப் பேணிவரும் இச்சமூகத்தில் வடக்கு-தெற்கு என்ற பிரிவினையை உண்டாக்கத் துடிக்கும் உங்கள் அரசியல் முயற்சி முற்றிலும் வீண்.

காரணம், பொழுது போகாவிட்டால் வடமாநிலத்தவர்களை வசைபாடி வன்மத்தைக் கக்குவது, பிகாரில் தேர்தல் காலம் வந்தால் வடமாநிலத்தவர்களைப் ‘பிரதர்’ எனக் கூறி இண்டி கூட்டணியினருடன் போட்டோஷூட் நடத்துவது போன்ற திமுக அரசாங்கத்தின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர்.

எனவே, ஆட்சி முடியும் தருவாயிலாவது தங்கள் இருமுகன் வேடத்தைக் களைந்துவிட்டு, முதலில் தமிழக மக்களின் தேவைகளைக் கண் திறந்து பாருங்கள் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Are you trying to act like a saintChief Minister Stalin? - Nainar Nagendran questions
ShareTweetSendShare
Previous Post

பீகாரில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் – NDA தேர்தல் அறிக்கை வெளியீடு!

Next Post

திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எல்.முருகன்

Related News

பீகார் மக்கள் பற்றி விமர்சனம் : அம்பலமான திமுகவின் இரட்டை வேடம்!

திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எல்.முருகன்

அற்ப அரசியலை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் : அண்ணாமலை

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் செங்கோட்டையன் – இபிஎஸ் அதிரடி

தெருநாய் கடி விவகாரம் -தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைக்க எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹைட்ரஜன் குண்டு சோதனை : அதிரடி காட்டும் இந்தியா – உலக நாடுகள் அதிர்ச்சி!

AI புரட்சியால் உலக பில்லியனர்களின் செல்வம் பன்மடங்கு உயர்வு : சீன பொருளாதார மந்தத்தால் ஆசியாவின் செல்வ வளர்ச்சி பாதிப்பு!

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

பாகிஸ்தானின் முகமூடியை கிழித்தெறிந்த தலிபான் படைகள் : பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியின் வாக்குமூல வீடியோ வைரல்!

வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல் – 17 குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தது ஏன்?

ட்ரம்ப்- ஜி ஜின்பிங் சந்திப்பு – சீனாவிடம் அடிபணிந்த அமெரிக்கா!

சமையல் உலகில் புது அவதாரம் எடுத்துள்ள சுசுகி நிறுவனம் : மனிதாபிமான முயற்சி -வெற்றி பெற்ற கதை!

சுனாமியை ஏற்படுத்தும் ரஷ்யாவின் அணுசக்தி ட்ரோன் : அதிர்ச்சியில் அமெரிக்கா – அணுஆயுத சோதனை நடத்த உத்தரவு

காங்கிரஸ் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது – பிரதமர் மோடி

புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies