அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிரடியாக நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பசும்பொன்னில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் சேர்ந்து சென்ற நிலையில் இன்று செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் செங்கோட்டையன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கழகத்தில் இருப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிந்திருந்தும், அவர்களுடன் சேர்ந்து கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இபிஎஸ் கூறியுள்ளார்.
 
			 
                    















