செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விடுமுறை குறித்து செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தேர்தல் துறை சார்பில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற உள்ளதால், இன்று வேலை நாள் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
எனவே மாவட்டத்தில் இன்று எந்த பள்ளியும் செயல்பட வேண்டாம் என்றும், வாக்குச்சாவடி நிலைய அலுவலகங்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















