திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைச்சாலையில் அரிய வகை “ஆப்பிரிக்க துலிப்” மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
கொடைக்கானல் மலைப்பாதைகளில் ஆப்பிரிக்க நாடுகளின் தாயகமான “துலிப்” மரங்கள் உள்ளன. இந்த மரத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பூக்கள் பூப்பது வழக்கம். அதன்படி தற்போது மரங்களில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
மருத்துவ குணம் கொண்ட இந்த பூக்கள் மலேரியா, சரும நோய், ஒவ்வாமை போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
















