உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக தேர்வர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
2 ஆயிரத்து 708 காலி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. இந்தநிலையில் இணையதள விண்ணப்ப பதிவில் முந்தைய நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம், வருகை பதிவேடு, ஊதியம் உள்ளிட்டவற்றிற்கான சான்றிதழ்களை கேட்பதாகவும் இந்த சான்றிதழகள் தங்களிடம் இல்லாததால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை எனவும் தேர்வர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
எனவே விண்ணப்பிக்கும் முறையை தேர்வு வாரியம் மாற்ற வேண்டும் என தேர்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
















