கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, கோயில் சொத்துகளை அபகரித்தவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வாரந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
எனவும் உத்தரவிட்டார்.
















