கார்த்திகை மாதம் நெருங்கி வரும் நிலையில் ஆண்டிப்பட்டி அருகே கோயிலுக்கு மாலை அணிபவர்களுக்காக வேஷ்டிகள், சேலைகள் உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சக்கம்பட்டியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஐயப்பன், முருகன் சுவாமிகளுக்கு மாலை அணிபவர்களுக்காக வேஷ்டிகள் மற்றும் மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் பெண்களுக்கான சேலைகளும் உற்பத்தி செய்யும் பணிகள் மும்முரமாக தொடங்கியுள்ளது.
















