ஆந்திராவின் அம்மாப்பள்ளி அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளிப்பட்டு, திருத்தணி தாலுகாவில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அம்மாப்பள்ளி அணை, தொடர் மழை காரணமாக நிரம்பியது.
அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
நீர் திறப்பால் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி தாலுகாவில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ளை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
















