வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 4 ரூபாய் 50 பைசா குறைக்கப்பட்டு, ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்பு மாதத்திற்கான 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 4 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 868 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
















