கோவாவில் 125 கோடி ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மை கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, குப்பைகள் வீதிகளில் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெகிழி பைகள், உணவுக் கழிவுகள் என அனைத்தும் நவீன உபகரணங்கள் உதவியுடன் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
இதற்கான பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு பணிகள் தொய்வின்றி நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுலா பிரியர்களின் மனதில் கோவா நீங்கா இடம்பிடித்துள்ள நிலையில், இந்தத் திடக்கழிவு மேலாண்மை கட்டமைப்பு மிக அவசியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் கடற்கரைகள் அனைத்தும் மிகவும் தூய்மையாகக் காணப்படுகின்றன.
















