விவசாயிகளுக்குரிய பதிலளிக்காத அதிகாரிகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் எனக் குறைதீர் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அப்போது முன் இருக்கையில் இருப்பவர்களுக்கு மட்டுமே பேச வாய்ப்பளிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, அனைவருக்கும் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்ததோடு விவசாயிகளுக்குப் பதிலளிக்காத அதிகாரிகளைக் கடிந்து கொண்டார்.
















