சீனாவில் நாய் வடிவ ரோபோக்களை கொண்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ள வீடியோ வைரலாகி உள்ளது.
ரோபோக்களை கொண்டு பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் சீனா தற்போது காட்டு தீயை அணைக்கும் பணிகளில் நாய் வடிவ ரோபோக்களை ஈடுபடுத்தி வருகிறது.
காட்டுத்தீயால் ஏற்படும் கடும் வெப்பம் காரணமாகப் பல்வேறு நாடுகளில் தீயணைப்பு வீரர்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் சீனாவில் நாய் வடிவ ரோபோக்களில் தண்ணீர் குழாய்களைப் பொருத்தி ரிமோட் மூலம் காட்டுத்தீயை அணைக்கும் பணியைச் சீன தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
















