கரூர் அருகே மினி லாரி கவிழ்ந்த விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் ஏராளமான தனியார் கல் குவாரிகள் இயங்கி வரும் நிலையில், கட்டுமானப் பணிக்காக எம்.சாண்ட் ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று புறப்பட்டுச் சென்றது.
அதிவேகமாகச் சென்ற மினி லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், லாரிமீது பயணித்த வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கந்தர், பிரபாகரன், அஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் சந்திரகுமார், கிளீனர் ஜேம்ஸ் ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















