வியாட்நாமில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத மழைப்பொழிவால் அந்நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வியட்நாமின் மத்திய பகுதிகளான ஹியூ மற்றும் ஹோய் ஆன் ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கின.
வெள்ளப்பெருக்கு காரணமாக 13 பேர் உயிரிழந்தனர். மாயமான 11 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
















