உத்தரப்பிரதேசத்தில் SCST சட்டத்தின் கீழ் பொய் புகார் அளித்த பெண்ணுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர், SCST சட்டத்தின் கீழ் அளித்த புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
வழக்கை லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், சம்மந்தப்பட்ட பெண் பொய் புகார் அளித்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பெண்ணைக் குற்றவாளி என அறிவித்த நீதிபதி விவேகானந்த் சரண் திரிபாதி, அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
















