துபாயில் நடைபெறும் பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவனி லெகரா தங்கம் வென்று அசத்தினார்.
துபாயின் அல்ஐன் நகரில் 2025 பாரா துப்பாக்கிச் சுடுதல் உலக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய மகளிர் அணியின் அவனி லெகரா தங்கம் வென்றார்.
இதேபோல் ஆடவர் தனிநபர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஆகாஸ் 223 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு வீரரான சந்தீப்குமார், வெள்ளிப் பதக்கம் வென்றார்.
















