கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 4ஆவது பெரிய ஏரியான திருக்கோவிலூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாகவும், தென்பெண்ணை ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாகவும் திருக்கோவிலூர் பெரிய ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.
வாய்க்கால் மூலமாக தண்ணீர் வெளியேறி வருவதால், காட்டுப் பையூர், கொளப்பாக்கம், வில்லிவலம் உள்ளிட்ட ஏரியில் நீர் நிரம்பிது. கடல் போல் காட்சியளிக்கும் ஏரியின் ட்ரோன் வீடியோ வெளியாகியுள்ளது.
















