சென்னை மெரினா கடற்கரையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பனை மர விதைகளை நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நடைபாதையின் இருபுறமும் சுமார் 5 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இதில் தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தோர் மற்றும் நடிகர்கள் ஆரி, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவர்கள் மணல் பரப்பில் “பனை விதைப்போம்” என எழுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
















