இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதிக்கு திலகமிட்டு வரவேற்ற.வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது
இந்திய ராணுவத்தின் 30-வது தலைமை தளபதியாக இருக்கும் உபேந்திர துவிவேதி மத்தியப்பிரதேச மாநிலம் ரோவாப் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தனது மனைவியுடன் சொந்த ஊரான ரோவாப்புக்கு விமானத்தில் வந்து தரையிறங்கினார்.
அப்போது வேத மந்திரங்கள் ஓத ஹிந்து முறைப்படி நெற்றியில் திலகமிட்டு, மலர் மாலை அணிவித்து காவித்துண்டு அணிவித்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமானத்தில் இருந்து இறங்கியதும் அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை கண்ட நெட்டிசன்கள் ராணுவ உடையில் இருக்கும் போது திலகத்தை ஏற்றுக் கொண்டது சரியா? அல்லது தவறா? என விவாதித்து வருகின்றனர்.
ஆனால், வரவேற்பை அவமதிக்காமல் ஏற்றுக் கொண்ட ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதியின் செயல் நமது பண்பாட்டை பிரதிபலிப்பதாக பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















