சீனாவில் நாய் வடிவ ரோபோக்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
உலகிலேயே ரோபோக்கள் எனப்படும் இயந்திர மனிதர்களை அதிகம் கொண்ட நாடாக சீனா திகழ்கிறது. கடந்தாண்டு நிலவரப்படி சீனாவில் இயந்திர மனிதர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.
இது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட 3 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. மனிதர்களின் பல்வேறு தேவைகளுக்காக ரோபோக்களை உருவாக்கி வரும் சீனா தற்போது காட்டுத்தீயை அணைப்பதற்காக பிரத்யேக நாய் வடிவ ரோபோவை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் காட்டுத்தீயை எளிதாக அணைக்க முடியும் என்பதால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்பை தடுக்க முடியும் என சீனா கூறியுள்ளது.
இந்நிலையில் சீனாவில் நாய் வடிவ ரோபோக்களில் தண்ணீர் குழாய்களை பொருத்தி ரிமோட் மூலம் காட்டுத்தீயை அணைக்கும் பணியை சீன தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அது குறித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
















