சனாதனத்தை டெங்கு, மலேரியா என தாழ்த்தி பேசினாலும் அழிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது மடாதிபதி, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் மணிவிழா மாநாடு நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், சனாதனம் என்ற அடிப்படையை கொண்டு பாரதம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாரத நாட்டில் சனாதன கொள்கையை அழிய விடாமல் பாதுகாப்பதில் ஆதீனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார். ஐந்தாயிரம் ஆண்டுகளாக பாரத நாட்டில் சனாதனம் பாதுகாக்கப்பட்டு வருவாதாகவும், சனாதனத்தை டெங்கு, மலேரியா என தாழ்த்தி பேசினாலும் அழிக்க முடியாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
















